ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர்கள் விடுதி திறப்பு

ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர்கள் விடுதி திறக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-15 19:17 GMT

தாந்தோணிமலை ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர்கள் விடுதி கட்டிடம் ரூ.2 கோடியே 44 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று விடுதியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்துகொண்டு விடுதியின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். இந்த விடுதியில், 7 மாணவர்கள் அறை, ஒரு காப்பாளர் அறை, ஒரு உணவருந்தும் அறை, ஒரு பொருள் வைக்கும் அறை, ஒரு எரிபொருள் அறை, ஒரு சமையலறை, 12 குளியலறை, 24 கழிவறை வசதி உள்ளது. இதேபோல் கடவூரில் ரூ.2 கோடியே 44 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல விடுதியினையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்