ஆதிதிராவிட அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் ஆதிதிராவிட அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை பொது கல்வித்துறையோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதிதிராவிட அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதி அறக்கட்டளை நிறுவனர் திருமாறன் தலைமை தாங்கினார்.லோக் ஜனசக்தி மாநில பொதுச்செயலாளர் ஓவியர் ஆனந்த், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் பூவை ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை பொது கல்வித் துறையோடு இணைக்கும் முடிவை அரசு கைவிடக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஆதிதிராவிட அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.