போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு.!

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2023-06-28 04:23 GMT

சென்னை,

மதுரை காவல்துறை ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்தபோது, போலி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக கடந்தாண்டு புகார் எழுந்தது.

இந்த சம்பவத்தில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்தில் வராகி என்பவர் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் டேவிட்சன் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க  தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியன் ரிப்போர்டர் இதழின் ஆசிரியர் வாராகி கடந்த மே மாதம் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது புகார் அளித்தார். இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல் தலைமையகத்திற்கு நேற்று மாற்றப்பட்டார். 

மேலும், போலி கடவுச்சீட்டு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் டேவிட்சனிடமும் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்