விழுப்புரம் மாவட்டத்தில்கோதுமை போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு ரேஷன் கடைகளுக்கு வினியோகம்கலெக்டர் பழனி தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் கோதுமை போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-14 18:45 GMT


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோதுமை வரத்து

விழுப்புரம் மாவட்டத்தில் 1,254 ரேஷன் கடைகள் மூலம் 6 லட்சத்து 16 ஆயிரத்து 912 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை துறை குடும்ப அட்டைதாரர்களுக்கும் என இம்மாதத்திற்கான 99.9 டன் ஒதுக்கீடு பெறப்பட்டதில் 69.855 மெ.டன் (70.5 சதவீதம்) ரேஷன் கடைகளுக்கு 13.6.2023 வரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 29.36 மெ.டன் அளவுள்ள கோதுமை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள இருப்பு வைக்கப்பட்ட கோதுமை வருகிற 20-ந் தேதிக்குள்ளாக ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இம்மாதம் 69.855 மெ.டன் கோதுமை வழங்கப்பட்டதில் விழுப்புரம் தாலுகாவிற்குட்பட்ட ரேஷன் கடைகள் மூலம் 15.524 மெ.டன் கோதுமையும், வானூர் தாலுகாவிற்குட்பட்ட ரேஷன் கடைகள் மூலம் 7.063 மெ.டன் கோதுமையும், எஞ்சியுள்ள 1.305 மெ.டன் கோதுமையும், திண்டிவனம் தாலுகாவிற்குட்பட்ட ரேஷன் கடைகள் மூலம் 10.447 மெ.டன்னும், செஞ்சி தாலுகாவிற்குட்பட்ட ரேஷன் கடைகள் மூலம் 8.326 மெ.டன்னும், விக்கிரவாண்டி தாலுகாவிற்குட்பட்ட ரேஷன் கடைகள் மூலம் 8.298 மெ.டன்னும், மரக்காணம் தாலுகாவிற்குட்பட்ட ரேஷன் கடைகள் மூலம் 4.084 மெ.டன்னும், மேல்மலையனூர் தாலுகாவிற்குட்பட்ட ரேஷன் கடைகள் மூலம் 5.056 மெ.டன்னும், கண்டாச்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட ரேஷன் கடைகள் மூலம் 5.720 மெ.டன்னும், திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவிற்குட்பட்ட ரேஷன் கடைகள் மூலம் 5.337 மெ.டன்னும் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பு

மேலும்இருப்பு வைக்கப்பட்டுள்ள 29.36 மெ.டன் கோதுமை வருகிற 20-ந் தேதிக்குள்ளாக விழுப்புரம் தாலுகா ரேஷன் கடைகளுக்கு 5.313 மெ.டன்னும், வானூர் தாலுகா கடைகளுக்கு 1.305 மெ.டன்னும், திண்டிவனம் தாலுகா கடைகளுக்கு 5.483 மெ.டன்னும், செஞ்சி தாலுகா கடைகளுக்கு 5.897 மெ.டன்னும், விக்கிரவாண்டி தாலுகா கடைகளுக்கு 5.094 மெ.டன்னும், மரக்காணம் தாலுகா கடைகளுக்கு 1.556 மெ.டன்னும், மேல்மலையனூர் தாலுகா கடைகளுக்கு 1.345 மெ.டன்னும், கண்டாச்சிபுரம் தாலுகா கடைகளுக்கு 1.510 மெ.டன்னும், திருவெண்ணெய்நல்லூர் தாலுகா கடைகளுக்கு 1.733 மெ.டன்னும் வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் தற்போது வரை 686.428 மெ.டன் அளவில் கோதுமை இருப்பில் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ரேஷன் கடைகள் மூலம் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்