விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-12-19 19:11 GMT


விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், வெம்பக்கோட்டை, திருமலைபுரம், செங்குளம், ராணி சேதுபுரம், வடக்கு நத்தம், பூலாங்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்காச்சோள பயிர் காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் படைப்புழு தாக்குதலாலும் பயிர் முற்றிலுமாக நாசம் அடைந்துள்ளது. மேலும் பல்வேறு கிராமங்களில் நெல், பருத்தி, நிலக்கடலை பயிர்களும் சேதம் அடைந்துள்ளன. காரியாபட்டி பகுதியில் வெங்காயப்பயிரும் சேதமடைந்து உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் சேதமடைந்து வாழ்வாதாரத்தை இழந்து கடன் தொல்லையால் விவசாயிகள் வாடும் நிலையில் உள்ளனர். ஆதலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் வருவாய் துறை, வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்