சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பரண்டு பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக உன்னிகிருஷ்ணன் பொறுப்பேற்று கொண்டார்.

Update: 2023-06-26 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக உன்னிகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று தூத்துக்குடியில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 1996-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம், பாளையங்கோட்டை நுண்ணறிவு பரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றினார். தொடர்ந்து பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், சென்னை, நெல்லை சரக கியூ பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றினார். பின்னர் பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று பெறுப்பேற்று கொண்டார். இவர் போலீசில் சிறப்பாக பணியாற்றியதற்காக முதல்-அமைச்சர் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் போன்றவற்றை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்