வந்தவாசி தாலுகாவில் கூடுதலாக 3 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள்

வந்தவாசி தாலுகாவில் கூடுதலாக 3 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்றும், அவை 10-ந்தேதி முதல் செயல்படும் என்றும் கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-05 16:55 GMT

வந்தவாசி தாலுகாவில் கூடுதலாக 3 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்றும், அவை 10-ந்தேதி முதல் செயல்படும் என்றும் கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக நெல் கொள்முதல் மையங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022-23 காரீப் சம்பா மற்றும் நவரைப் பருவத்தில் 11 தாலுகாக்களில் 71 நெல் கொள்முதல் மையங்கள் மூலம் தமிழக அரசின் அரசாணைகளின் படி சன்னரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரத்து 160-ம், இதர ரகங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 115-ம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைமுறையில் செயல்பட்டு வரும் 71 நெல் கொள்முதல் மையங்களுடன் வந்தவாசி தாலுகாவில் சத்தியவாடி, தெய்யார் மற்றும் எரமலூர் ஆகிய 3 இடங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் மையங்கள் வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) முதல் செயல்பட உள்ளது.

8-ந்தேதி முதல் முன்பதிவு

இதற்கான முன்பதிவு 8-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் நடைமுறையில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி தங்களது நெல்லை கொள்முதலுக்கு வழங்கி பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

மேலும் விவசாயிகள் முன்பதிவு செய்வதில் சந்தேகம், சான்றுகள் பெறுதல், நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற காலதாமதம் அல்லது சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555, 9445245932 (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) மற்றும் 6385420976 (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) ஆகிய எண்களை தொடர்பு கொண்டோ அல்லது 'வாட்ஸ் அப்' மூலமாக தெரிவித்தாலோ அவை உடனடியாக சரி செய்யப்படும்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்