ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு

காவேரி பூம்பட்டினம்,கீழ சட்டநாதபுரம் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-08-26 18:45 GMT

திருவெண்காடு:

காவேரி பூம்பட்டினம்,கீழ சட்டநாதபுரம் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வளர்ச்சி பணிகள்

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காவேரி பூம்பட்டினம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடந்து வரும் பணிகளை மாநில ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் அருண் மணி நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி ஊராட்சியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர், கீழையூர் கிராமத்தில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார்.

அப்போது அவர் பயனாளிகளிடம் வீடுகளை விரைந்து கட்டி முடிக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார். அதே பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு

தொடர்ந்து 15-வது மாநில நிதிக்குழு திட்டத்தில் பூம்புகார் மீனவர் அரசினர் நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் காவேரிப்பூம்பட்டினம் ஊராட்சியில் அரசின் நலத்திட்டங்கள் சிறப்பாக நடைபெறுகிறது என ஊராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் கீழ சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காவலம்பாடி அரசினர் தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள சத்துணவு மைய கட்டிடத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) இளங்கோவன், உதவி பொறியாளர்கள் தெய்வானை, சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிகுமார், துரைராஜ், ஓவர்சியர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்