வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தாா்.
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் கூடுதல் கலெக்டர் மதுபாலன் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஸ்ரீபுத்தூர் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மற்றும் ரேஷன் கடை ஆகியவற்றின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அவர் தொடர்ந்து அம்புஜவல்லி பேட்டை, சேல்விழி ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் குளம் தூர்வாரும் பணி, சாத்தாவட்டம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி கட்டுமான பணி, கட்டி முடிக்கப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 நீர்த்தேக்க தொட்டிகள், ஸ்ரீ நெடுஞ்சேரி, மருங்கூர் ஆகிய கிராமங்களில் வீடு கட்டும் பணிகள் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஸ்ரீமுஷ்ணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், விமலா(கிராம ஊராட்சி), ஊராட்சி ஒன்றிய பொறியாளர், அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.