வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
கலசபாக்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கலசபாக்கம்
கலசபாக்கம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ரிஷப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலாடி பஞ்சாயத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை, அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் பச்சையம்மன் கோவில் அருகே குளம், தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பருவதமலை அடிவாரத்தில் சாலை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் ரேஷன் கடை, விநாயகர் கோவில் தெருவில் போடப்பட்டு வரும் சிமெண்டு சாலை, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.
மேலும் காந்தபாளையம், கெங்களமாதேவி, சிறுவள்ளூர் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட சிறுபாலங்களில் தற்போது நபார்டு திட்டத்தின் மூலம் மேம்பாலம் கட்டப்பட உள்ள இடங்களையும் அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, முருகன், கவுன்சிலர் கலையரசிதுரை ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம், எழில்மாறன், பத்மாவதி பன்னீர்செல்வம் உள்பட என்ஜினீயர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.