பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

தச்சம்பட்டு பகுதிகளில் படிக்கும் மாணவர்களின் வசதிக்காக பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-07 10:51 GMT

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தச்சம்பட்டு. இதனை மையமாக கொண்டு சின்னகல்லப்பாடி, பெரியகல்லப்பாடி, அள்ளிக்கொண்டாப்பட்டு, தலையாம்பள்ளம், நரியாப்பட்டு, சேவூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தச்சம்பட்டில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர்.

பள்ளிக்கு சென்று வர காலை, மாலை நேரங்களில் பஸ் வசதிகள் இல்லாததால் காலை நேரங்களில் குறித்து நேரத்திற்கு பள்ளிக்கு வரவும், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லவும் வெகு நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. வெகு நேரம் கழித்து மாணவ-மாணவிகள் வீட்டிற்கு வருவதால் பெற்றோர்கள் அச்சப்படக்கூடிய சூழல் நிலவுகறது.

மேலும் அந்த வழியாக வரும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் பஸ்களில் தொங்கியபடி செல்கின்றனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்