திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.56 கோடியில் கூடுதல் கட்டிடம்

திருப்பத்தூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.56 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்ட பூஜையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-04-15 16:48 GMT

திருப்பத்தூர் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.56 கோடியில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் சிறப்பு சிகிச்சை பிரிவு, அடிப்படை கட்டமைப்பு பணிகளுடன் கூடிய கட்டிடம் கட்டுவதற்கான பூஜை போட்டு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள இடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் எம்.பழனி தலைமை தாங்கினார். அரசு தலைமை மருத்துவர் கே.டி.சிவக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி ஆகியோர் கலந்துகொண்டு பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

இதில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) டாக்டர் மாரிமுத்து, மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், உதவி செயற் பொறியாளர்கள், மருத்துவர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்