ரூ.24¼ கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம்
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.24¼ கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டும்பணியை கலெக்டர் தொடங்ககி வைத்தார்.
ஆம்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.24 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் புற நோயாளி பிரிவு, ஐ.சி.யு., ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டு, ஆய்வகம், ஸ்கேன் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டுமான பணியினை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பூமி பூஜை செய்து கட்டிட பணியினை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் ஜோலார்பேட்டை தேவராஜி, ஆம்பூர் வில்வநாதன், நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அகமது, துணைத் தலைவர் ஆறுமுகம், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட அவைத்தலைவர் ஆனந்தன், அரசு துறை அதிகாரிகள், மருத்துவகள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.