நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

Update: 2022-05-27 17:52 GMT

வேலூர்

சினிமா நகைச்சுவை நடிகர் யோகிபாபு வேலூர் அருகே உள்ள செங்காநத்தம் மற்றும் பூட்டுத்தாக்கு, ரத்தினகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்புக்காக வந்துள்ளார்.

அவர் இன்று மாலை சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர் சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

அவரை பார்த்த பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலர் தங்கள் செல்போனில் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்