ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்

ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-11-15 22:07 GMT

பெத்தநாயக்கன்பாளையம்:

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விசேஷ பூஜைகள் தினமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திரைப்பட நடிகர் யோகி பாபு மற்றும் நகைச்சுவை நடிகர் கணேஷ் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் 146 அடி உயர சாமிக்கு மலர் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டனர். முன்னதாக கோவில் நிர்வாகி ஸ்ரீதர் சார்பில் நடிகர் யோகி பாபுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்