நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம்: திருவுருவச் சிலைக்கு குடும்பத்தினர் மரியாதை

சென்னை அடையாறு மணிமண்டபத்தில் சிவாஜி சிலைக்கு குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர்.

Update: 2023-07-21 07:16 GMT

சென்னை,

நடிகர் சிவாஜி கணேசனின் 22 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அடையாறு மணிமண்டபத்தில் சிவாஜி சிலைக்கு குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர்.

தந்தையின் படத்திற்கு மூத்த மகன் ராம்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல சென்னை சத்தியமூர்த்தி பவனில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் சிவாஜிகனேசனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  

Full View
Tags:    

மேலும் செய்திகள்