மலையை சுற்றி கிரிவலப் பாதை அமைக்க நடவடிக்கை

வெண்குன்றம் கிராமத்தில் மலையை சுற்றி கிரிவலப் பாதை அமைப்பதற்காக கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப் சிங் ஆய்வு செய்தார்.

Update: 2023-02-09 16:10 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்துள்ள வெண்குன்றம் கிராமத்தில் புகழ்பெற்ற தவளைகிரீஸ்வரர் கோவில் மலை மீது உள்ளது. மலையை சுற்றி கிரிவலப் பாதை அமைப்பதற்காக மாவட்ட கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப் சிங் நேரில் ஆய்வு செய்தார்.

முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு சிமெண்டு வைக்கும் இடத்தையும், கிராமத்தில் குப்பைகள் பிரிக்கும் கூடத்தையும் பார்வையிட்டார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, ஸ்ரீதர் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்