கச்சத்தீவை மீட்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேட்டி
கச்சத்தீவை மீட்பது குறித்து நிர்வாக ரீதியாக ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரிமணியசுவாமி கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;
மீனவர்களின் நலனில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மீனவர்களை அவசர காலத்தில் காப்பாற்றும் வகையில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தித் தர பரிசீலனை செய்யப்படும். இறால் ஏற்றுமதியில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது காங்கிரஸ்-திமுக. கச்சத்தீவை மீட்பது குறித்து நிர்வாக ரீதியாக ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.