கள்ளக்குறிச்சி: வன்முறைக்குள்ளான பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்

கள்ளக்குறிச்சியில் வன்முறைக்குள்ளான பள்ளியில் பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-30 10:27 GMT

சேலம்,

கள்ளக்குறிச்சியில் வன்முறைக்குள்ளான பள்ளியில் பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், கள்ளக்குறிச்சியில் வன்முறைக்குள்ளான பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி வந்து விடக்கூடாது என்பதற்காக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன்படி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மற்ற கல்வி நிறுவனங்களில் வைத்து வகுப்புகள் எடுப்பது தொடர்பாகவும், தமிழகத்தில் எந்த பள்ளியில் படிக்க விரும்பினாலும் அதற்கான சிறப்பு அனுமதி வழங்குவது தொடர்பாக துறைச்சார்பாக மாவட்ட கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டு மேற்பாா்வை செய்யப்பட்டு வருகிறது.

மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்ப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 907 பேர் தங்கள் விருப்பங்களை தெரிவித்துள்ளனர். விரைவில் அதனை பரீசிலித்து அவர்களுக்கான ஏற்பாட்டை அரசு செய்யும் என அவர் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை மேம்படுத்த தமிழகம் முழுவதும் 800 க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். என அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்