மாற்றுத்திறனாளிகளுக்கு சம வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு சம வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-14 19:04 GMT


மாற்றுத்திறனாளிகளுக்கான சம வாய்ப்புகளின் படி தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச்சட்டம் 2016-ன் பிரிவு 36-ன் படி தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 5 சதவீதம் வேலை வாய்ப்பினை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பில் தனிக்கவனம் செலுத்தி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு பெற்று வழங்க அறிவுறுத்தியுள்ளது. 20-க்கும் அதிகமான தொழிலாளர்கள் கொண்ட தனியார் தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனம் அல்லது தொழிற்சாலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்பினை கண்டறிந்து தகுந்த வேலை வாய்ப்பு வழங்கிடுமாறும், மாற்றுத்திறனாளிகளுக்கான சம வாய்ப்பு கொள்கையினை தயார் செய்து தனியார் தொழிற்சாலைகள் தங்களது தொழிற்சாலைகளில் காட்சிக்கு வைத்திடவும், விருதுநகர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திடவும் தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்