விவசாயிகளின் மதிப்பு கூட்டு பொருட்களை சந்தைப்படுத்த நடவடிக்கை

உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் விவசாயிகளின் மதிப்பு கூட்டு பொருட்களை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-06 18:45 GMT

உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் விவசாயிகளின் மதிப்பு கூட்டு பொருட்களை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

உழவர் உற்பத்தியாளர் குழு

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழக அரசு, விவசாயிகள் சாகுபடி செய்யும், உற்பத்தி பொருட்களை, சந்தைப்படுத்துவதற்கு, விவசாயிகளை வணிகர்களாக உருவெடுக்கின்ற வகையில், பல்வேறு தொழில்நுட்ப ரீதியான கருத்துகள் மற்றும் பயிற்சிகளை சிறப்பாக வழங்கி வருகிறது. குறிப்பாக, வேளாண் மக்கள் தங்களை குழுவாக ஒருங்கிணைத்து, அதன்மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்படி, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது 9 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், விவசாயிகள் உற்பத்தி பொருட்களை மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றி, தாங்களும் வணிகர்களாக உருவெடுக்கும் பொருட்டு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தைப்படுத்துதல்

வேளாண் வணிகத்துறையின் சார்பில் 1,000 விவசாயிகள் ஒன்றிணைந்து, ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி அதில், ஒவ்வொரு விவசாயியும் தலா ரூ.1,000 முதலீடு செய்தால், அத்தொகையுடன் குழுவிற்கு தமிழக அரசின் மூலமாக, பங்கீட்டு தொகையாக ரூ.15 லட்சமும், இதுதவிர, மத்திய அரசின் பங்கீட்டு தொகையும் வழங்கப்பட்டு, விவசாயிகளின் மதிப்புக்கூட்டு பொருட்களை சந்தைப்படுத்தி, அவர்களை பயன்பெற செய்வதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்