உரிய அனுமதியின்றி செயல்பட்ட 28 மதுபான கூடங்களை மூட நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 28 மதுபான கூடங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-30 18:26 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் மது அருந்தும் கூடங்களில் போலி மது மற்றும் டாஸ்மாக் தவிர மற்ற மதுபானங்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் அனுமதி பெற்று இயங்கி வரும் தனியார் மதுபானம் அருந்தும் கூடங்களை மாவட்ட கலால் உதவி ஆணையர் ஷோபா தலைமையில், டாஸ்மாக் மேலாளர் திருமாறன் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு நடந்தது. இதில் மதுபானக்கூடங்களில் விற்கப்படும் மதுக்கள் டாஸ்மாக்கில் வாங்கப்பட்டதா? என்றும் மேலும் வேறு போலியான மது பானங்கள் விற்கப்படுகிறதா? என்றும் மது பாட்டில்களை நேரில் ஆய்வு செய்தனர், இதனைத் தொடர்ந்து மதுபான கூடத்தில் மதுபானங்கள் இருப்பு மற்றும் போதுமான கழிவறை வசதிகள் உள்ளிட்டவைகள் சரியாக உள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் மதுபானம் அருந்தும் கூடத்தில் நேற்று தொடங்கிய ஆய்வு தொடர்ந்து அனைத்து இடங்களிலும் நடைபெறும் என்றும், மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 37 டாஸ்மாக் கடைகளில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 28 மது அருந்தும் கூடங்களை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது அனுமதி பெற்ற மதுபான கூடங்கள் மட்டும் இயங்கி வருவதாக டாஸ்மாக் மேலாளர் திருமாறன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்