பா.ஜனதா பெண் நிர்வாகிகளை இழிவுபடுத்திய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை;போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

பா.ஜனதா பெண் நிர்வாகிகளை இழிவுபடுத்திய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2023-08-04 18:45 GMT

நாகர்கோவில், 

பா.ஜனதா பெண் நிர்வாகிகளை இழிவுபடுத்திய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

பா.ஜனதா புகார் மனு

பா.ஜனதா மாநில செயலாளர் மீனாதேவ் தலைமையில் மாவட்ட மகளிரணி தலைவி சத்தியஸ்ரீ ரவி மற்றும் பெண் நிர்வாகிகள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ ஒன்றை பார்த்தோம். அதில் பா.ஜ.க.வை சேர்ந்த பெண் நிர்வாகிகளை மிக கேவலமாக சித்தரித்ததோடு மட்டுமல்லாமல் மாநில தலைவர் அண்ணாமலையோடு சம்பந்தப்படுத்தி வீடியோ வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவை 2 யூடியூப் சேனல்கள் உருவாக்கி வெளியிட்டுள்ளன. இது பா.ஜ.க.வை சேர்ந்த பெண் நிர்வாகிகள் அனைவரையும் களங்கப்படுத்தும் செயலாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களை தடை செய்து, அதன் உரிமையாளர் மற்றும் அதில் நடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்