தடுப்பணையின் சுவரை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாசன வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையின் சுவரை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Update: 2022-11-28 18:45 GMT

தமிழக விவசாய மக்கள் இயக்க தலைவர் சந்திரசேகரன் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று அளித்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ஊராட்சி காமராஜர் காலனி, பொட்டவெளி தெரு ஆகியவற்றை இணைப்பு சாலையின் குறுக்கே கழுகாணிமுட்டம் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்வதற்காக ரூ.5 லட்சம் செலவில் வாய்க்காலின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தடுப்பணை சுவரை சமூக விரோதிகள் பொக்லின் எந்திரம் மூலம் இடித்து விட்டனர். இதனால் அந்த பகுதியில் உள்ள கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. எனவே கழுக்காணிமுட்டம் வாய்க்கால்களில் கட்டப்பட்டிருந்த தடுப்பணை சுவரை இடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்