கள்ளக்குறிச்சியில் 10 போலீசார் மீது பாய்ந்த நடவடிக்கை - எஸ்பி அதிரடி...!
கள்ளக்குறிச்சியில் 10 போலீசார் மீது எஸ்.பி பகலவன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டானந்தன் கிராமத்தில் சுதந்திர தினத்தன்று சாராய வியாபாரம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி போலீசார் காட்டானந்தல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 200 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் மாவட்ட எஸ்.பி பகலவன் கீழ்குப்பம் மற்றும் சின்னசேலம் போலீஸ் நிலையங்களில் இதுகுறித்து நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அதில் சாராயம் விற்பனை செய்யும் நபர்களிடம் தொடர்பில் இருந்ததாக கூறி 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 6 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10 போலீசாரை வேறு போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. பகலவன் உத்தரவிட்டுள்ளார்.