சுருக்குமடிவலையை பயன்படுத்தி மீன் பிடித்தால் நடவடிக்கை
சுருக்குமடிவலையை பயன்படுத்தி மீன் பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர் நலத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்
மீனவர் நலத்துறை அதிகாரி சண்முகம், அனைத்து மீனவ பஞ்சாயத்தார், மீனவ கூட்டுறவு சங்க தலைவர்கள், விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கடல்சார் மீன்பிடித்தலை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது. தடை செய்யப்பட்ட வலைகளை மீன்பிடி கலன்களில் ஏற்றிச் செல்லக்கூடாது. தடை செய்யப்பட்ட உபகரணங்களை படகில் வைத்திருந்தாலோ அல்லது அதனை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபட்டாலோ அந்த உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், சுருக்குமடி, இரட்டைமடி மற்றும் தடை செய்யப்பட்ட வலையினை வைத்திருக்கும் படகு உரிமையாளர்கள் மீது சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.