கீழ்பவானி வாய்க்காலில் கழிவுகளை கொட்டினால் நடவடிக்கைநீர்வளத்துறை எச்சரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-08-17 22:19 GMT

கடத்தூர்

கீழ்பவானி வாய்க்கால் மூலம் திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல வாய்க்கால் கரைகளின் இருபுறங்களும் சுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கோபி கொளப்பலூர் ரோடு வாய்க்கால் மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலின் கரையோரத்தில் நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பு பலகையில், 'கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்கால் மற்றும் கால்வாய் கரைகளில் கோழி கழிவுகள், குப்பை கழிவுகளை கொட்டக்கூடாது. மது பாட்டில்களை வீசக்கூடாது. மேலும் வாய்க்கால் கரை பகுதிகளில் கனரக வாகனங்களை நிறுத்தி வைத்து சுத்தம் செய்யவும் வேண்டாம். மீறி செயல்பட்டால் போலீஸ் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'.

இவ்வாறு அந்த எச்சரிக்கை பலகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்