கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்

Update: 2023-07-17 21:03 GMT

கைத்தறி தொழில் நலிவடையாமல் பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் நலனை பாதுகாக்கவும் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அதன்படி கைத்தறிக்காக ஒதுக்கப்பட்ட பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி-சேலை, துண்டு, அங்கவஸ்திரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, ஜமக்காளம், உடைத்துணி, கம்பளி, சால்வை, உல்லன் ட்விட், சத்தார்க் ஆகிய ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்த ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்பவர்கள் மீது போலீஸ் துறை மூலம் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோர்ட்டு மூலம் 6 மாத கால சிறை தண்டனை அல்லது விசைத்தறிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளாா்.

மேலும் செய்திகள்