சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ்சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தெரிவித்தார்.

Update: 2023-05-24 11:31 GMT

பொறுப்பேற்பு

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பாலகிருற்ணன் சென்னை ஆவடிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஆல்பர்ட் ஜான் நியமிக்கப்பட்டார்.

அவர் நேற்று திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோப்பில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து புதிய போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடுமையான நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும். இதற்காக 15 தனிப்படைகள் அமைத்து மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் கடந்த 20 நாட்களாக நடத்தப்பட்ட சாராய வேட்டையில் பலர் கைது செய்ய்பட்டுள்ளனர். 20 ஆயிரம் லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது. இச்சோதனை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும். திருப்பத்தூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்டம் அமைந்துள்ளது. இதனால் சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கும். சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தகவல் தெரிவிக்கலாம்

மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் தொடர்பான தகவல்களை 91599599919 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட போலீசாரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்