மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கலெக்டர் அமர் குஷ்வாஹா எச்சரிக்கை

திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்துகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2022-07-11 19:06 GMT

திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்துகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

குறை தீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில், நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

மொத்தம் 406 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு பாதுகாவலர் சான்றை கலெக்டர் வழங்கினார்.

நடவடிக்கை

குறைதீர்வு கூட்டத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாவட்ட அளவிலான அதிகாரிகள் கலந்துகொள்ளவில்லை. இரண்டாம் நிலை அலுவலர்கள் மட்டுமே பெரும்பாலும் கலந்துகொண்டனர். இதனை கவனித்த கலெக்டர் அடுத்த கூட்டத்திற்கு உயரதிகாரிகள் கலந்துகொள்ளவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும், மனு மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் கோப்புகளை கூட்டத்திற்கு அவசியம் கொண்டு வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், ஹரிஹரன், மோகன குமரன், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், கலால் உதவி ஆணையர் பானு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்