சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரை விற்றால் நடவடிக்கை

சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடும்ப நலத்துறை துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2023-07-14 19:45 GMT

சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடும்ப நலத்துறை துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.


கருக்கலைப்பு


கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் கவுரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-


மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்தகங்கள், போலி டாக்டர்க ளிடம் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிடுவதால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு கர்ப்பிணிகளின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம்.


இதை தவிர்க்க அரசு டாக்டர்களுக்கு பாதுகாப்பான கருக் கலைப்பு சேவைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அரசு டாக்டர்கள் பாதுகாப்பான கருக்கலைப்பு சேவைகளை அரசு ஆஸ்பத்திரிகளில் வழங்கி வருகின்றனர். அதை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.


அரசின் விதிமுறைகள்


அரசின் ஆணையை மீறி சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யும் மருந்தகங்கள் மற்றும் போலி டாக்டர்கள் மீது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மீரா தலைமையிலான மருத்துவ குழு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.


அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்தல், சிறைத் தண்டனை மற்றும் உரிமம் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைள் எடுக்கப்படும். பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு பாதுகாப் பான கருக்கலைப்பு குறித்த அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்