சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை - மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
தமிழக அரசுக்கு இறுதியாக ஒரு வார கால அவகாசம் வழங்கி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சட்டவிரோத குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு இறுதியாக ஒரு வார கால அவகாசம் வழங்கி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையில் சட்டவிரோத குவாரிகள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு எடுத்தது..
இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணையில் சட்டவிரோத குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒருவாரம் கால அவகாசம் கோரப்பட்டது. தமிழக அரசுக்கு இறுதியாக ஒரு வார கால அவகாசம் வழங்கி உத்தரவு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.