திருப்பத்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு

திருப்பத்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-12 18:45 GMT

திருப்பத்தூர் பேரூராட்சி 18 வார்டுகளை உள்ளடக்கியதாகும். இப்பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் மக்களின் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் கூறினர். குறிப்பாக செட்டியதெரு, கல்லாகுழி தெரு, மேஸ்திரியார் தெரு, காளியம்மன் கோவில் தெரு, உசேன் அம்பலம்நகர், புதுத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 தினங்களுக்கு மேலாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆங்காங்கே குழாய்கள் உடைப்பு ஏற்படுவதால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது எனஅதிகாரிகள் கூறினர். இருப்பினும் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்