மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, உத்தரவின்படி சிவகங்கை, தொழிலாளர் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில், தொழிலாளா் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விடுமுறை ஆய்வின் போது சட்டவிதிகளை பின்பற்றாமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி மாவட்டத்தில் 55 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.