நீச்சல் போட்டியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாதனை

நீச்சல் போட்டியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2022-11-27 19:13 GMT

திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்திற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான நீச்சல் போட்டி புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் சையது அபூபக்கர் மூன்றாம் இடமும், மாணவர்கள் கார்த்திக் ராஜா, சுதர்சன், சேதுபதி, சையது அபூபக்கர், ஆகியோர் 2-ம் இடமும் பெற்று சாதனை படைத்தனர். இதையடுத்து சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், துறை பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்