செட்டிகுளம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வில் செட்டிகுளம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2022-12-04 18:58 GMT

வடக்கன்குளம்:

தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றனர். அவர்களுக்கு அரசு சார்பாக மாதம் 1500 ரூபாய் வீதம் இரண்டு வருடங்களுக்கான தொகை அவருடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும். சாதனை படைத்த மாணவர்களையும், ஊக்குவித்த ஆசிரியர் ஜேசு ஆகியோரையும் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தினி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லிங்கதுரை, உறுப்பினர்கள் ராஜா, சுடலை, செல்வ பாண்டி மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்