அரசு பள்ளி மாணவிகள் சாதனை

குத்து சண்டை போட்டியில் குத்து சண்டை போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர். படைத்தனர்.

Update: 2022-12-01 18:45 GMT

சிங்கம்புணரி, 

பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருப்புவனத்தில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவிகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள 25 பள்ளிகளை சேர்ந்த 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் இதில் பங்கேற்றனர். போட்டியில் சிங்கம்புணரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 35 மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் சிங்கம்புணரி பள்ளி மாணவிகள் 23 தங்கம், 10 வெள்ளி, 2 வெண்கலம் பெற்று சாதனை படைத்தனர்.

சிங்கம்புணரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் தொடர்ந்து 7-வது ஆண்டுகளாக முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாணவிகள் ஜனவரி மாதம் திருச்சியில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்குபெற உள்ளனர்.

சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை கலாநிதி சக்திவேல், உடற்கல்வி ஆசிரியர் சேவுகரத்தினம், மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்