பேடறஅள்ளி அரசு பள்ளி மாணவிகள் சாதனை

டேக்வாண்டோ, கைப்பந்து போட்டிகளில் பேடறஅள்ளி அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.

Update: 2022-11-07 18:45 GMT

பாப்பாரப்பட்டி:

தர்மபுரியில் உள்ள விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பேடறஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஜீவராணி டேக்வாண்டோ போட்டியில் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். மேலும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதேபோல் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் இப்பள்ளி மாணவிகள் 3-ம் இடம் பிடித்தனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்கள் கவிதா, தமிழரசன் ஆகியோரையும் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்