10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உளுந்து மகசூலில் சாதனை

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உளுந்து மகசூலில் சாதனை

Update: 2022-06-17 19:35 GMT

தஞ்சை மாவட்டத்தில், 65 நாட்களில் ரூ.163 கோடி மதிப்பிலான உளுந்து அறுவடை செய்யப்பட்டுள்ளது. கலெக்டரின் மகத்தான திட்டத்தால் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மகசூலில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உளுந்து சாகுபடி

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டமானது குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைந்த பூமியாக இருந்து வந்தது. காலப்போக்கில் பல்வேறு சூழ்நிலைகளால் முப்போகம் பயிரிட்டு விளைச்சல் எடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் ஆளாகி இரு போகம் மட்டுமே பயிரிட்டனர்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடியில் மட்டுமே ஈடுபட்டு ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்ய தொடங்கினர்.

கலெக்டரின் மகத்தான திட்டம்

விவசாயிகள் மாற்றுப்பயிர் எதுவும் பயிரிடாததால் மண் வளம் மட்டுமல்ல விளைச்சலும் குறைய தொடங்கியது. தஞ்சையின் மண் வளம் குறைந்து வருவது எதிர்காலத்தில் நெல் மகசூலிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தனது சொந்த முயற்சியில் மண் வளத்தை பெருக்குவதற்காகவும், விவசாயிகளை மாற்றுப்பயிரான உளுந்து சாகுபடி செய்வதற்கும் ஊக்கப்படுத்தினார்.

இந்த திட்டத்திற்கு 'தஞ்சை நஞ்சையில் உளுந்து' என்று அவர் பெயர் சூட்டினார்.

செலவில்லா திட்டம்

தஞ்சை மாவட்டத்தில் உளுந்து சாகுபடி பரப்பளவை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு செலவில்லாமல் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையிலும் சம்பா, தாளடி அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பாக உளுந்து பயிர் சாகுபடி செய்யும் 'தஞ்சை நஞ்சையில் உளுந்து' சாகுபடி என்ற செலவில்லா திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் மானிய விலையில் விதை உளுந்து, இலவசமாக உரங்கள் போன்ற உதவிகள் செய்து கொடுக்கப்பட்டன.

10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சாதனை

விவசாயிகளுக்கு, கலெக்டர் கொடுத்த உற்சாகத்தால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் அறுவடை முடிந்த பிறகு சுமார் 39 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட 65 முதல் 70 நாட்களில் உளுந்து அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஒரு எக்டேருக்கு தோராயமாக 900 கிலோ வீதமும், ஒரு ஏக்கருக்கு 350 கிலோ வீதமும் மகசூல் கிடைத்தது.

25 ஆயிரம் டன் உளுந்து

அறுவடை செய்யப்பட்ட உளுந்து வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலம் கிலோ ரூ.63-க்கு கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 25 ஆயிரம் டன் உளுந்து மகசூல் கிடைத்துள்ளது. சுமார் ரூ.163 கோடி மதிப்பிலான உளுந்து தஞ்சை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் குறைந்த நாளில் நிறைவான வருமானம் கிடைத்ததுடன் மண்வளம் கூடியிருப்பதும் கண்கூடாக அறிந்துள்ளதாக மாவட்ட கலெக்டரை விவசாயிகள்

Tags:    

மேலும் செய்திகள்