வேன் மோதி வாலிபர் சாவு

Update: 2023-04-01 17:05 GMT


குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகே தாராபுரம் செல்லும் சாலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையை கடக்க முயன்று உள்ளார். அப்போது எதிரே சின்னவீரம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் சுரேஷ் (வயது 25) ஓட்டி வந்த வேன் எதிர்பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது மோதியது. இதில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து குடிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்