அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி

Update: 2022-10-30 15:55 GMT


குன்னத்தூர் அருகே அரசு பஸ்- மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அண்ணன்-தம்பி

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பூலாங்குளத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 25). இவர் ஒர்க் ஷாப் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது உறவினர் திருச்சியை சேர்ந்த வடிவேல் (26.) இவர்கள் இருவரும் அண்ணன், தம்பி முறை ஆவதால் தனசேகரை பார்க்க வடிவேல் திருச்சியில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் இருவரும் ஒரு மோட்டார்சைக்கிளில் செங்கப்பள்ளி சென்றனர். பின்னர் அங்கிருந்து குன்னத்தூர்-செங்கப்பள்ளி சாலையில் பூலாங்குளம் திரும்பி வந்து கொண்டிருந்தனர். பூலாங்குளம் பிரிவு அருகே வந்த போது எதிரே குன்னத்தூரில் இருந்து திருப்பூர் நோக்கி டவுன்பஸ் சென்று கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.

பலி

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே 2 பேரும் இறந்து விட்டதாக கூறினார். இந்த விபத்து குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்