வாகனம் மோதி ஓட்டல் தொழிலாளி பலி

Update: 2022-10-06 16:40 GMT


நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகா மேக்கலாந்துறையை சேர்ந்தவர் இளஞ்செல்வன்(வயது 35). இவர் வெள்ளகோவிலில் தங்கி முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந் நிலையில் நேற்று அதிகாலை முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு வங்கி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப் போது அந்த வழியாக வாகனம் இளஞ்செல்வன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் இளஞ்செல்வன் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

 இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் இளஞ்செல்வன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் இறந்த இளஞ்செல்வனுக்கு விஜயா என்ற மனைவியும், 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்