திருவாரூர் மாவட்டத்தில், 37 இடங்களில் அதிக விபத்துகள்

திருவாரூர் மாவட்டத்தில் 37 இடங்களில் அதிக விபத்துகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வாகன சோதனையை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2023-04-08 19:15 GMT

திருவாரூர் மாவட்டத்தில் 37 இடங்களில் அதிக விபத்துகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வாகன சோதனையை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர் விபத்துகள்

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் சில நேரங்களில் காயங்களும், உயிர்பலியும் ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களே விபத்துகளில் அதிகளவில் சிக்குகிறார்கள்.

அதிலும் விபத்து நடந்த இடத்திலேயே மீண்டும், மீண்டும் அதிகளவில் விபத்து நடப்பது வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் 37 இடங்களில் அதிக விபத்துகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வாகன சோதனையை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் விபத்துகள் மாலை நேரங்களில் அதிகமாக நடக்கிறது. அதுவும் மதுபோதையில் வாகனங்களை இயக்குவதால் தான் அதிகளவில் விபத்துகள் நடக்கிறது. இதனால் மாலைநேரங்களில் வாகன சோதனையினை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்து நடக்க கூடிய இடங்களை துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலை என்ஜினீயர்கள், கிராம சாலை என்ஜினீயர்கள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விபத்து நடப்பதற்கான காரணங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 37 இடங்கள் அதிகம் விபத்துகள் நடக்கும் பகுதி என கண்டறியப்பட்டு உள்ளது. விபத்துகள் நடக்கும் பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்