மறைமலைநகர் அருகே லாரிகள் மோதி விபத்து
மறைமலைநகர் அருகே லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து நேற்று காலை சென்னை நோக்கி சிமெண்டு ஏற்றிச்செல்லும் கனரக லாரி வந்து கொண்டிருந்தது. மறைமலைநகர் அடுத்த மல்ரோசபுரம் சிக்னல் அருகே வந்தபோது சாலையை கடக்க முயன்ற மினி லாரி, சிமெண்டு் லாரி மீது மோதியது. இதில் லாரியின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய லாரியை கிரேன் மூலம் மீட்டனர்.
இந்த விபத்து காரணமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரிதும் அவதிப்பட்டனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.