2 லாரிகள் மோதி விபத்து

ராணிப்பேட்டையில் 2 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2023-09-11 19:59 GMT

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து டிராக்டர் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆட்டோ நகர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டிரைவர்கள் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். மேலும் விபத்து காரணமாக வாலாஜா- முத்துக்கடை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்