சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து
திருவாரூர் நகர் மற்றும் தண்டலை, சேந்தமங்கலம் பகுதிகளில் உள்ள வீடுகளில் மாடுகள் வளர்க்கப்படுகிறது. இந்த மாடுகள் உரிய முறையில் பாரமரிப்புமின்றி வளர்க்கப்படாததால் திருவாரூர் பகுதியில் பிரதான சாலைகளில் எந்த நேரமும் சுற்றித்திரிகின்றன. சரியான உணவு, தீவனங்கள் கிடைக்காததால் கால்நடைகள் சுவரில் ஒட்டப்படும் போஸ்டர்கள், சாலை ஒரங்களில் வீசப்படும் குப்பைகளில் உள்ள உணவு கழிவுகளை தின்று பசியை போக்கி வருகிறது. காலை முதல் இரவு வரை உணவுக்காக சுற்றித்திரியும் மாடுகள் நள்ளிரவு நேரங்களில் மயிலாடுதுறை செல்லும் பிரதான சாலை, சேந்தமங்கலம், தண்டலை மன்னார்குடி செல்லும் சாலை என அனைத்து பிரதான சாலைகளில் படுத்தும், நின்றும் கொண்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.