ஆசனூரில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து- டிரைவர் படுகாயம்

ஆசனூரில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து- டிரைவர் படுகாயம்

Update: 2023-06-06 21:14 GMT

தாளவாடி

கரூரில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஆசனூருக்கு மரப்பாரம் ஏற்றுவதற்காக லாாி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. லாரியை ஆசனூரை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது 35) என்பவர் ஓட்டினார். ஆசனூர் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் ஜெகதீஸ்வரன் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்