கதிரடிக்கும் எந்திரம் மோதி வாலிபர் சாவு
கதிரடிக்கும் எந்திரம் மோதி வாலிபர் இறந்தார்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள டி.அரசபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. கிளை செயலாளர் கருப்பு. அவரது மகன் சரத்குமார் (வயது 26). இவருடைய மனைவி புவனா. இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. சரத்குமார் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சரத்குமார் தனது குடும்பத்தினருடன் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சரத்குமாரின் சகோதரர் சதீஷ்குமார் கப்பலூரில் புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தினார். இதில் பங்கேற்க வந்த உறவினர் ஒருவரை அழைத்துக்கொண்டு சரத்குமார் மோட்டார்சைக்கிளில் சென்றார். திருமங்கலம்-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் அவரை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பினார். திருமங்கலம்-உசிலம்பட்டி சாலை சந்திக்கும் இடத்தில் வந்தபோது எதிரே வந்த கதிரடிக்கும் எந்திர வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சரத்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல் அறுவடை எந்திர வாகன டிரைவர் விவேக்கை கைது செய்தனர்.