சங்ககிரியில் கார் மோதி முதியவர் சாவு-மனைவிக்கு மாத்திரை வாங்க சென்றபோது பரிதாபம்

சங்ககிரியில் கார் மோதி முதியவர் இறந்தார். அவர் மனைவிக்கு மாத்திரை வாங்க சென்றபோது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.

Update: 2023-02-04 22:04 GMT

சங்ககிரி:

சங்ககிரி அருகே இருகாலூர் கிராமம் மயில்புறாகாடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 67). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் சுப்பிரமணி தனது மனைவிக்கு மாத்திரை வாங்குவதற்காக சங்ககிரிக்கு மொபட்டில் சென்றார். வி.என்.பாளையம் பட்டறை மேடு பகுதியில் சங்ககிரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்