மாரண்டஅள்ளி:
தர்மபுரி மாவட்டம் பெல்லுஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 58). இவர் மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் தேவராஜ், இரவு பணிக்காக போலீஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மாரண்டஅள்ளி அருகே குண்டுபள்ளம் என்ற இடத்தில் திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது. இதில் தேவராஜ் சாலையோர பள்ளத்தில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, தேவராஜை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தேவராஜ் மனைவி செல்வி (50) கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.